WEB WWW.MKSTALIN.NET
M.K.Stalin Official Website, Stalin, MK Stalin, DMK's Treasurer, DMK, Tamil Nadu
வாழ்கை வரலாறு

பெயரின் முக்கியத்துவம்:

 
பிறந்த நாள்
:
01-03-1953
பெற்றோர்
:
கலைஞர் மு. கருணாநிதி - தயாளு அம்மாள்
கல்வி
:
இளங்கலை (அரசியல் அறிவியல்)

 

ஈ. வெ. ராமசாமி அவர்கள் சோவியத் நாட்டிற்குச் சென்று திரும்பிய பின்னர் கம்யூனிசக் கொள்கைகளால் கவரப்பட்டார்கள். இது தமிழக மக்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் சோவியத் நாட்டின் தலைவர்களான லெனின் , ஸ்டாலின் போன்றோரின் பெயர்களைச் சூட்டத் தலைப்பட்டன. ரஷ்யா, மாஸ்கோ போன்ற நகரங்களின் பெயர்கள் கூட குழந்தைகளுக்குப் பெயர்களாகச் சூட்டப்பட்டன. இவ்வழியில் தி.மு.க கட்சியின் தலைவரான டாக்டர் கலைஞர் அவர்களும் தனது மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார்கள்.

ஒரு முறை, தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டியதில் உள்ள உள்ளார்ந்த காரணத்தை விளக்கிய போது தலைவர் கலைஞர் அவர்கள், மூத்த மகனுக்கு அவருடைய தந்தை ""முத்துவேலரின்"" மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ""முத்து"" என்று பெயரிட்டதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கை வீரரான புதுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக இரண்டாவது மகனுக்கு ""அழகிரி"" எனப் பெயர் வைத்தாகவும், சோவியத் நாட்டின் புகழ்மிக்க தலைவரான ஜோசப் ஸ்டாலின் பெயரால் மூன்றாவது மகனை ""ஸ்டாலின்"" என வைத்ததாகவும், தமிழ் மொழியின்பால் கொண்டுள்ள பற்றின் காரணமாக கடைசி மகனுக்கு ""தமிழரசு"" எனப் பெயரிட்டு மகிழ்ந்ததாகவும் கூறினார்கள்.

இப்பெயர் ஸ்டாலின் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய குடும்பத்தினர் சென்னை அண்ணா சாலையிலுள்ள பெயர் பெற்ற கல்வி நிறுவனமான ""சர்ச் பார்க் கான்வென்ட்டில்"" அவரைச் சேர்க்க விரும்பியபோது, பள்ளி அதிகாரிகள் புரட்சியாளரின் பெயரைக் கண்டு நடுக்கமுற்று அப்பள்ளியில் அப்பையனைச் சேர்க்க வேண்டுமெனில் அவனுடைய பெயரை மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினர். இந்த நிபந்தனையினைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை கலைஞர் அவர்கள், பள்ளியைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஸ்டாலினின் பெயரையன்று என்பதில் உறுதியாக இருந்தார்கள். இதன் காரணமாக ஸ்டாலின் அப்பள்ளியில் சேர முடியவில்லை. சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லுhரி பள்ளியில் சேர்ந்தார். ரஷ்ய மொழியில் ஸ்டாலின் என்பதற்கு இரும்பு மனிதன் என்று பொருள்.அதற்கேற்றவாறு இப்பெயர் மு.க.ஸ்டாலின் பெயருடன் இரும்பு போல் - திராவிட இயக்கத்தின் தளபதியைப் போன்று ஒட்டிக் கொண்டது.

அரசியல் வாழ்க்கையின் உதயம்

இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கு அரசியலில் மிகுந்த ஆர்வம் இருந்த காரணத்தால் தி.மு.க -வில் தீவிர உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். திராவிட இயக்கம் ஒரு சமூக அரசியல் இயக்கமாகும். எனவே மாணவர்களும் இளைஞர்களும் பெரிதும் அதன்பால் கவரப்பட்டனர். மேலும் தலை சிறந்த தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் மற்றும் ஏனையோரின் மொழிவளமும், பேச்சும், நடையும் தமிழக இளைஞர்களிடையே புரட்சி எண்ணங்களை கிளர்ந்தெழச்செய்தன. எனவே இளைஞரான ஸ்டாலினும் இவ்வியக்கத்தின்பால் கவர்ந்திழுக்கப்பட்டதில் வியப்பேதுமில்லை.

 

Untitled-3
 
 
Untitled Document
  Copyright © mkstalin.net 2011 Terms of Service    |    Privacy Policy    |    Contact Us