WEB WWW.MKSTALIN.NET
M.K.Stalin Official Website, Stalin, MK Stalin, DMK's Treasurer, DMK, Tamil Nadu
தொகுதி

ஸ்டாலின் அனுபவத்திற்கும், களப்பணிகளுக்கும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதற்கும், சிறைவாசங்களுக்கும், மேடைப் பேச்சுகளுக்கும், எழுத்தாற்றலுக்கும் ஏற்பளிக்கும் வகையில் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது.

சென்னை மாநகரத்தில் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தளபதி மு.க.ஸ்டாலின். முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது இத்தொகுதியில் போட்டியிட்டார்.

தோல்வியே மாபெரும் வெற்றிக்கான படிக்கல்லாகும்:

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதாலும், முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் உடல் நலம்குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாலும் 1984- ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் அனுதாப அலை வீசியது. அ.இ.அ.தி.மு.க வேட்பாளரும் அன்றைய அமைச்சருமான கே.ஏ.கிருஷ்ணசாமிக்கு எதிராக ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளராக சென்னையிலுள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்தப்பட்டார். ஸ்டாலின் முதன் முறையாக தேர்தலில் நின்றாலும் கூட அவர் கடுமையான போட்டி வேட்பாளராக விளங்கியதுடன் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியுற்றார்.

 

 

பதிவான வாக்குகள் 91,831

மு. க. ஸ்டாலின் (தி.மு.க)

43,954

கே.ஏ.கிருஷ்ணசாமி (அ.இ.அ.தி.மு.க)

46,246

1987 -ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் இறந்ததைத் தொடர்ந்து அவருடைய மனைவி ஜானகி இராமச்சந்திரன் தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் தோல்வியடைந்தது. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டு 21.01.1989 -ஆம் நாளன்று தேர்தல் நடைபெற்றது. ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்து போட்டியிடும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிடைக்க, அவர் மாபெரும் வெற்றி பெற்றார்.

பதிவான வாக்குகள் 91,831

மு. க. ஸ்டாலின் (தி.மு.க)

50,818

தம்பிதுரை(அ.இ.அ.தி.மு.க)

46,246

கலைஞர் மு. கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஸ்டாலின் முதன் முறையாக சட்ட மன்றப் பேரவை உறுப்பினராக அடியெடுத்து வைத்தார். 1989 -90 -ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று அவருடைய கன்னி உரையை ஆற்றினார். அவர் பல விவாதங்களில் கலந்து கொண்டு மக்கள் நலன் குறித்தும், தமது தொகுதி குறித்தும் பல வினாக்களை எழுப்பினார்.

கன்னிப்பேச்சு:

1989-1990 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது ஸ்டாலின் தனது கன்னி உரையை நிகழ்த்தினார். அவரளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றியதை முன்னிலைப்படுத்தி அவர் பேசினார். அவர் அதனையடுத்து நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடர்களிலும் கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தார். சென்னை நகர மக்களின் நலன் குறித்த வினாக்களை எழுப்பும்போது, அவர் தனது தொகுதியான ""ஆயிரம் விளக்கை"" மறக்கவேயில்லை. அவர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுடன் சேர்ந்து அவருடைய தொகுதியில் குறை தீர்க்கும் நாளிற்கு ஏற்பாடு செய்தார். அவர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவர் 122-ஆம் எண் வார்டைச் சேர்ந்த ஆரோக்கியசாமிக்கு திருமணத் தொகையாக ரூ.5000/- வழங்கினார்.

 

Untitled-3
 
Untitled Document
  Copyright © mkstalin.net 2011 Terms of Service    |    Privacy Policy    |    Contact Us