WEB WWW.MKSTALIN.NET
M.K.Stalin Official Website, Stalin, MK Stalin, DMK's Treasurer, DMK, Tamil Nadu
இளைஞரணிச் செயலாளர்

1967-1968ம் ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்று அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார், கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. அமைப்பின் மூலமாக அந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு பொதுக் காரியங்களை ஆற்றினார்கள் குறிப்பாக அண்ணா பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் நடத்தினார்கள்.

இப்படிப் படிப்படியாக இளைஞரணி அமைப்பை வளர்த்து அமைப்பு ரீதியாக 1980ஆம் ஆண்டு இளைஞரணி மதுரையிலே ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டு அதற்குப்பிறகு திருச்சியிலே 2ஆம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைப்பதில் மு.க.ஸ்டாலின் திறம்பட பணியாற்றதை கவனித்த கட்சித் தலைமை அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொருப்பை வழங்கியது.

இளைஞர் அணிக்கென தனி அலுவலகம் அமைந்ததன் பின்னணியில் ஒரு செய்தி உள்ளது. சென்னைஅண்ணா சாலையில் 28.1.1964ல் தி.மு.க.வுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது தி.மு.க. தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் தி.மு.க. நிறுவனர் அறிஞர் அண்ணா அதனை திறந்து வைத்தார். தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது. அறிவகத்தை ஒழுக்கித் தரும்படி தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது. இதுபோல தி.மு.க. தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது. புராணத்தில் ஒரு பழத்திற்காக போட்டியிட்ட பிளையார் முருகனைப் போல ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஆரோக்கியமான போட்டியை உருவாக்கினார்.

இதனையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். காலை, மாலை கொடி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும், இரவில் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்து அதன் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார். கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார். 02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தலைவர் கலைஞர் திறந்து வைத்தார்.

 

தி.மு. கழக மாநாடுகளிலும் போராட்டக் களங்களிலும் இளைஞரணி முன்னிற்கும் அணியாக செயல்பட்டது. ""கழகம் நடத்தும் விழாக்களையொட்டி நடைபெற்ற வந்த ஊர்வலகங்கள், தி.மு.க. இளைஞரணி தொடங்கியபிறகு பேரணி என்று சொல்லக்கூடிய பெருமையைப் பெற்றது என தி.மு.க. தலைவர் குறிப்பிடுகிறார்.

1  2  3

 

 
Untitled-3
 
Untitled Document
  Copyright © mkstalin.net 2011 Terms of Service    |    Privacy Policy    |    Contact Us